பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்? விசாரணை நடத்த உத்தரவு

 
சுசி லீக்ஸால் விவாகரத்து ஆகிவிட்டது… பாடகி சுசித்ரா உருக்கம்!

பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார். அண்மையில் சுசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “யாரடி நீ மோகினி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

பாடகி சுசித்ரா

அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டனர்.  உலகையே மாற்றுவோம் என்று அவர்கள் கூறி வந்தனர். திருமணமான இரண்டே ஆண்டுகளில் கார்த்திக் குமார் ஒரு ஓரின செயற்கையாளர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.  கடந்த 14 வருடங்களாக நான் அவரிடம் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை தனுஷ் அவரும் அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?  கார்த்திக் குமார் தனது ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மும்பையில் ரூம் எடுத்து தங்குவார்” என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இப்பிரச்சனை கோலிவுட்டில் பூதாகரமான நிலையில், இந்த சம்பவத்திற்கு கார்த்திக்குமார் விளக்கம் அளித்தாக ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது. அதில் கார்த்திக் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும், குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தியும் பேசியிருந்தார். அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை. எனது வார்த்தைகள் அல்ல. சாதி குறித்து பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை, இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை என இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிகையில், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய நடிகர் கார்த்திக் குமார் பேசியதாக பரவும் வீடியோ குறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.