கள்ளச்சாராயம் - மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிப்பு

 
கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடி மாற்றி உத்தரவிட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையில் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விஷ சாராய விற்பனையை கட்டுப்படுத்த சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து ஆலையின் உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.