அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

 
பேருந்து

SETC எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SETC buses trip over 'low' FASTag balance

அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரையில் 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்த திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கூகுள் பே, போன் பே போன்ற செயல்கள் மூலம் டிக்கெட்களை பயணிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசு பேருந்துகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாகவும் அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்படும் நிலையில் பேருந்துகளில் இந்த திட்டம் என்பது தங்களுக்கு  வர பிரசாதமாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.