அண்ணா பல்கலையில் விரைவில் எம்.இ. ட்ரோன் டெக்னாலஜி படிப்பு அறிமுகம்

 
anna univ

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ ட்ரோன் டெக்னாலஜி படிப்பு விரைவில் கொண்டு வரப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Career Opportunities | How Drone Technology can shape your future: Courses,  eligibility, opportunities - Telegraph India

சென்னை ஆழ்வார்பேட்டையில் ட்ரோன்கள் விற்பனை செய்வதற்காக தனிப்பட்ட ஷோரூம் இந்தியாவில் முதல்முறையாக கருடா ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவியுள்ளது. இந்த ஷோரூமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கி வைத்தார். மேலும் முழுக்க முழுக்க இந்திய உற்பத்தியான ட்ரோனி ட்ரோன் என்று சிறிய வகை இந்திய தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ், “அக்னி குரூப் ஆப் கம்பெனி மற்றும் கல்லூரி மூலம் பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இன்று ட்ரோனி ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் நேரடியாக பயனர்களை சென்று சேருவதில்லை, டிரோன்களுக்கென இந்தியாவில் முதல்முறையாக தனியாக கருடா ஏரோ ஸ்பேஸ் ஷோரூம் அமைத்துள்ளார்கள். ட்ரோன்கள் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும்.டிரான்களை தொழிற்சாலை பொருளாக இல்லாமல் கமர்சியல் பொருளாக கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.

anna university


ட்ரோன் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகம் வருவதற்கு இந்த தனிப்பட்ட ட்ரோன் ஷோரூம் ஒரு முதல் அடியாக இருக்கும் விவசாய மக்களுக்கு மட்டும் இன்றி பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்களுக்கும் உபயோகிக்கும் வகையில் பல வகைகளில் ட்ரோன்கள்  தயாரிக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் ME ட்ரோன் டெக்னாலஜி படிப்பு இந்த ஆண்டே கொண்டு வர முயற்சி செய்தோம். விரைவில் கொண்டு வரப்படும். மெக்கானிக்கல் படிப்பில் இருந்து எப்படி ஆட்டோ மொபைல் வந்ததோ, அப்படி ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பு ஏற்கனவே உள்ளது. அதில் ட்ரோன் படிப்பு வரும் பொழுது அதற்கும் அதிக வேலை வாய்ப்பு இருக்கும்” என்றார்...