போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

 
சென்னை மெட்ரோ

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் போன் பே செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ திட்ட‌ இயக்குநர் சித்திக் ஐஏஎஸ் மற்றும் மெட்ரோ திட்ட மற்றும் செயலாக்குத்துறை இயக்குனர்  அர்ச்சுனன் பங்கேற்றனர். 

PhonePe: இனி இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் போன் பே வசதி  கிடைக்கும்... வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்ற புதிய சேவை - cross-border  ...

போன் பே செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. மும்பை, டெல்லி, மெட்ரோவை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேடிஎம், வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் ஏற்கனவே பெற்று வந்த நிலையில் தற்போது போன் பே செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இச்செயலியில் சுவிட்சில் சிங்கிள் மற்றும் ரிட்டன் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் பாஸ் வாங்குதல் மற்றும் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்தல் ஆகிய மூன்று முக்கிய சேவைகளை பயணிகளுக்கு படிப்படியாக செயல்படுத்த இருக்கிறது.

முதற்கட்டமாக சுவிட்சில் சிங்கள் பயண டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. போன் பே செயலியில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ்  option உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து பணம் செலுத்தி டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம். குறிப்பாக இச்செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மெட்ரோ தொலைத் தொடர்பு மற்றும் சமிக்கை ஆலோசகர் மனோகரன், “மக்கள் வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்குவதை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு, என்சிஎம்சி கார்டு, அதன் பின்பு க்யூ ஆர் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட க்யூ ஆர் டிக்கெட் விற்கப்படுகிறது. காகித டிக்கெட்டுகளை குறைக்க வேண்டும் என்பதால் காகிதம் இல்லா க்யூ ஆர் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காகித டிக்கெட்டுகளை குறைப்பதற்காக போன் பே செயலி மூலம் டிக்கெட் புக்கிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.