பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை மிரட்டிய போதை ஆசாமிகள்... பேருந்தின் கண்ணாடி உடைப்பு

 
Bus

திருவெண்ணெய் நல்லூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து வாங்குவதில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லரிப்பாளையம் கிராமத்தில், திருக்கோவிலூரில் இருந்து  திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று அப்பகுதி வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில்  மது போதையில் வந்த 3 நபர்கள் மீது இடிக்க வந்ததாக கூறி, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர், பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள்  ஒருமணி நேரமாக அவதியடைந்தனர். 


 


இந்த சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மதுபோதையில் இது போன்று செயகளில் ஈடுபட்ட நபர்களால் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .