சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல் : விசிக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு..

 
சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல் : விசிக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு..


சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்  தனபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த வாசுதேவனூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பம் அமைத்துள்ளனர். இந்தக் கட்சிக் கொடிக்  கம்பத்தை அகற்றுவது குறித்து  கிராம நிர்வாக அலுவலர்,  சின்னசேலம் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கம்பத்தை அகற்றுவதற்காக போலீஸாருடன் சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா சென்றுள்ளார்.

சின்னசேலம் வட்டாட்சியருக்கு மிரட்டல் : விசிக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு..

இதனையடுத்து அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தனபால், கொடிக் கம்பத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்ததோடு, வட்டாட்சியர்  தரக்குறைவாக பேசி, கை, கால்களை வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.  இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற இந்திரா,  விசிக மாவட்ட செயலாளர் தனபால் மீது புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீஸார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.