“சகோதரர் விஜய் ஆட்சி..”- சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மார்க்கண்டேயன் பேட்டி

 
s

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் கைதாகி, திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 20ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், “ரீல்ஸ் ஆட்சியை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளனர். சிறையில் அடைப்பதால் என்னை ஒடுக்கிவிட முடியாது. சட்டப்பேரவையில் கடுமையான எதிர்வினைகளை திமுக கொடுக்கும். எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம். எங்களுக்கு சிறை என்பது புதிதல்ல, பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுக நிர்வாகிகளுக்கு ஒரு முக்தி தரும் இடம். சர்வாதிகாரப் போக்கோடு, பேச்சுரிமையை பறிக்கும் வகையில் சகோதரர் விஜய் ஆட்சி உள்ளது. அடக்குமுறைக்கு எதிராக நிமிர்ந்து நிற்போம். சர்வாதிகார போக்குடன் ஆட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறார் முதல்வர் விஜய்” என்றார்.