“முதல்வர் விஜய் அன்பாகப் பேசினார்”- எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நெகிழ்ச்சி பேட்டி
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்தவர்கள் மகிழ்ச்சியுடன் செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.
இ்துதொடர்பாக அவர்கள் அளித்த பேட்டியில், “முதலமைச்சரின் திடீர் வருகையைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை, அது ஒரு அதிர்ச்சியாக இருந்ததது , ஆனால் அவர் தங்களிடம் அன்பாகப் பேசியனர், இந்த வருகையைத் தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, கீழே ஏதோ பிரச்சனை என்று நினைத்து, சத்தம் கேட்டதாது, என்று பார்த்தால் முதலமைச்சர் வந்திருக்கிறார் என அறிந்தோம், ஆரம்பத்தில் அவருடைய காரை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று நினைத்தோம், ஆனால், அவர் நேரடியாக எங்கள் வார்டுக்கு எங்களிடம் பேசுவார் என்று கற்பனை கூட செய்யவில்லை, என் வாழ்நாளில் அவரைப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும், அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும்” என்றார்.
மற்றொருவர் பேசுகையில், “குழந்தை நலமாக இருக்கிறதா என்றும், மருத்துவ சிகிச்சை சீராக நடைபெறுகிறதா என்றும் முதலமைச்சர் கேட்டார், அவர்கள் எவ்வளவு காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று என்னிடம் விசாரிதார், குழந்தைக்கு இதயப் பிரச்சனை இருப்பதாகவும், அதனால் கட்டாயமாக 14 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது, நாளை அந்த 14 நாட்கள் நிறைவடைவதாகவும், அவர்கள் மருத்துவமனையிலிருந்து சொல்கிறோம் என அவரிடம் கூறினேன்” என்றார்.

