தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு
நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை நேற்று மகளிர் தினத்தில் பேசிய விஜய் வெளியிட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விஜய் எங்கு நிற்கப்போகிறார். தவெகவில் இருக்கும் முக்கிய தலைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை நேர்காணல் செய்யவுள்ளார். புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகரிலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்தில், அருண் ராஜ் திருச்செங்கோட்டிலும் போட்டியிட வாய்ப்புள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் போட்டியிட வாய்ப்புள்ளது. பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

