நாளை HCL நிறுவனத்தில் இண்டர்வியூ.. சென்னையில் பணி..!

 
1 1

HCL ஐடி நிறுவனத்தில் தற்போது இன்டர்நேஷனல் வாய்ஸ் (International Voice) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து செயல்பட வேண்டும். கஸ்டமர் கேர் திறமை இருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

லீடர்ஷிப் மற்றும் பணியாளர்களை மேனேஜ் செய்யும் திறமை இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். முன்அனுபவம் இல்லாதவர்களும், சம்பந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஏதாவது இன்டர்நேஷனல் வாய்ஸ் பிரிவில் பணியாற்றியவர்கள் என்றால் முன்னுரிமை அளிக்கப்படும்.

பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட்டிற்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech, No.8, MTH Road, AMb 6, Ambattur Industrial Estate, Ambattur, Chennai - 600 058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க செல்வோர் 2 ரெஸ்யூம் ஆதார், பான், லைசென்ஸ் என்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.