தலைநகரில் இன்று இரவு 10 மணி வரை இன்டர்நெட் சேவை கட்..!
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், டில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளன.டில்லியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்டர்நெட் சேவை தற்காலிகமாக துண்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
ஜன்பத்- கர்தவயா பாதை சந்திப்பில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி வரை துண்டிக்கப்படுகிறது.
டில்லியில் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான்பூச்சி இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் காயம் அடைந்தனர். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்டர்நெட் சேவையை மத்திய அரசு துண்டித்துள்ளது.

