அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி - அசத்தும் தமிழ்நாடு அரசு!!

 
tn

அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 

tn

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5,907 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3,267 நடுநிலைப் பள்ளிகள், 8,711 தொடக்கப் பள்ளிகளுக்கு 100 Mbps அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கும் இணைய இணைப்பு வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

govt

வளரும் தொழில்நுட்ப உலகில் எதிர் காலத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.