சர்வதேச மகளிர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..

 
stalin


 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.  

annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது.  சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, தமிழ்நாடு பாஜக  சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.  

vijay with kamal

மக்கள் நீதி மய்யம் தலைவர், “பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.” என்று கூறியுள்ளார்.