அனைத்து செவிலியர்களுக்கும் எனது நல்வாழ்த்து - ஓபிஎஸ்

 
ttn

சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நலமான நாடே வளமான நாடாகும். மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும். மக்களின் ஆரோக்கியத்தை, மக்களுக்கு நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் செவிலியர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே மாதம் 12-ஆம் நாள் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ops

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனியாக மருத்துவர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியதோடு, தன்னலம் கருதாது, கால நேரம் பார்க்காமல் செயல்பட்டு வந்த கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி, செவிலியர்களின் பணித்திறன் மேம்பாடு அடைய வழிவகுத்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

ops

தாய் சேய் நலம் மற்றும் நோய்த் தடுப்பு உள்ளிட்ட அனைத்து நல வாழ்வு பணிகளையும் சிறப்புற மேற்கொள்பவர்கள் செவிலியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பாடுபட்டவர்கள் செவிலியர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த செவிலியர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைத்து செவிலியர்களுக்கும் எனது சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.