சர்வதேச விருது பெற்ற ‘அங்கம்மாள்’: ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 
1 1

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' சிறுகதையை மையமாக வைத்து, ஸ்டோன் பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ப்ரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘அங்கம்மாள்’. கீதா கைலாசம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அங்கம்மாள்’ திரைப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி ‘சன் நெக்ஸ்ட்’ (Sun NXT) ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. சரண், பரணி, முல்லையரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.