கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அயனாவரம் சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு தொகை!

 

கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  அயனாவரம் சிறுமிக்கு  இடைக்கால இழப்பீடு தொகை!

கடந்த 2018ல் சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இருப்பினும் அது கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.

கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  அயனாவரம் சிறுமிக்கு  இடைக்கால இழப்பீடு தொகை!

விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லிப்ட் ஆபரேட்டர் பாபு உடல்நல குறைவு காரணமாக இறந்து போக வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேரும் சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என்றும் காவலாளி எரால்பிராசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, மற்ற 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையில் ஒன்றரை லட்சத்தை இடைக்கால நிவாரணமாக உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  அயனாவரம் சிறுமிக்கு  இடைக்கால இழப்பீடு தொகை!

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இடைக்கால தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சென்னை அயனாவரம் சிறுமிக்கு ரூ. 1.5 லட்சம் இடைக்கால இழப்பீடு தொகை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இழப்பீட்டு தொகையை வழங்கினார்.