இயக்குநர் ஷங்கரின் சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை!

இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதைக்களத்தை அரூர் தமிழ்நாடனின் புத்தகத்தில் திருடியதாக குற்றச்சாட்டப்பட்ட வழக்கில், இயக்குநர் சங்கருக்கு சொந்தமான ரூ. 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளது. Copyrights சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் இயக்குனரின் சங்கரின் 3 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. காப்புரிமை சட்டத்தை நிதி ஆதாயம் அடைந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எனது சொத்துகளை முடக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும், அதனை கைவிட உத்தரவிட கோரியும் இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனிநபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியிருக்க கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.