வெறும் 10 நிமிட சந்திப்பு! 2 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனு! விஜய்- மோடி சந்திப்பின் சுவாரஸ்யம்
தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி உடனான சந்திப்பு நிறைவு வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பை நீடித்தது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களை கூட அரை மணி நேரத்திற்கு மேல் சந்தித்து நலம் விசாரிப்பார் பிரதமர் நரேந்திர மோடி.ஆனால் தமிழ்நாடு முதல்வர் விஜயுடன் வெறும் பத்து நிமிடம் மட்டுமே சந்திப்பை நடத்தியுள்ளார்.
இத்தனை ஆண்டு காலங்களில் ஒரு பிரதமர் மற்றும் மாநில முதல்வர் இடையிலான சந்திப்பு இவ்வளவு சுருக்கமாக இருந்தது இதுதான் முதல் முறை. தமிழ்நாடு முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கொடுத்த வெறும் இரண்டே பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுதான்.
தமிழ்நாடு முதல்வர்கள் மட்டுமல்ல, நாட்டின் எந்த முதல்வர்கள் டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்தாலும் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து என்ன விஷயம் நடந்தது என்பதை விளக்கி சொல்லுவார்கள். ஆனால் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. விஜய் வெறும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

