3 மாசத்துல ₹14,618 கோடி வட்டி மட்டும்! தமிழக அரசின் கடன் சுமை எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது.அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் இருப்பதால் கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன.இவற்றில், கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்தான் அதிகம்.
இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை, அரசு மேற்கொள்கிறது.நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஆண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் மொத்த கடன், ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதற்காக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு உள்ளது.
கடந்த, 2025-26 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வாங்கப்பட்ட கடன், 19,377 கோடி ரூபாயாகவும், மொத்த கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டி, 12,495 கோடி ரூபாயாகவும் உள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும், வட்டிக்கு, 76,451 கோடி ரூபாய் செலவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மொத்த வருவாயில் வட்டி செலவின் பங்கு, 22.82 சதவீதமாக உள்ளது. 5 ஆண்டுகளில் செலுத்திய வட்டி 2021- 22ல் ரூ.41,564 கோடி2022- 23ல் ரூ. 46,911 கோடி2023- 24ல் ரூ. 53,566 கோடி 2024-25ல் ரூ. 59,909 கோடி 2025- 26 ரூ. 67,050 கோடி 2026- 27 ரூ. 76,452 கோடி பட்ஜெட் மதிப்பீடு

