5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு- ரூ.122 கோடி ஒதுக்கீடு

5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க 122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படும் என்று 2024 – 2025ம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இதன்படி, 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க 122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தபடவுள்ளது. கும்பகோணம், தென்காசி, காங்கேயம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.