ஆதவ் அர்ஜுனாவை துணை முதல்வராக்கும் முயற்சி தீவிரம்?
Jun 19, 2026, 19:48 IST1781878726602
ஆதவ் அர்ஜுனாவை துணை முதல்வராக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றாட சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் கூட முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் நிழல் முதலமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பதிலளிக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா துணை முதல்வராக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போலவே, தமிழகத்திலும் சட்டம்-ஒழுங்கு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களை சமாளிக்கும் நோக்கில், உள்துறை அமைச்சகம் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

