சாதிய மோதல்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு தீவிரம்- ஐஜி விஜயேந்திர பிதாரி

 
சாதிய மோதல்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு தீவிரம்-  ஐஜி விஜயேந்திர பிதாரி

தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார்.

நெல்லை, தென்காசி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, “தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் எந்தவித சமுதாய அல்லது சாதி சார்ந்த பாரபட்சத்துடன் செயல்படக் கூடாது. சாதி பாரபட்சத்துடன் செயல்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.