உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்க்கு கூடுதல் பொறுப்பு

 
உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்க்கு கூடுதல் பொறுப்பு

உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவின் ஐ.ஜி., அஸ்ரா கார்க், உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனித்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறையில் ‘இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்’ என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க்.