சென்னை அருகே ஒருங்கிணைந்த 'ஏ.ஐ. நகரம்' அமைக்கப்படும்: பிக்கி மாநாட்டில் அமைச்சர் குமார் தகவல்!
'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், 'டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்டு டிரான்ஸ்பர்மேஷன் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, சென்னை கிண்டியில் நடந்தது. இதை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் குமார் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
ஏ.ஐ.,யை உருவாக்குபவர்களாகவும், வடிவமைப்பாளர்களாகவும் மாணவர்கள் உருவாகும் வகையில் கல்வி அமைப்பு மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் எட்டு மாவட்டங்கள் ஏ.ஐ., வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகின்றன.சென்னை: "உலகத்தர ஆராய்ச்சி மையங்கள், சிறப்பு மையங்கள், தொழில் துறை வளாகங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த முழுதுமான ஏ.ஐ., சூழல் உடைய ஏ.ஐ., நகரம் சென்னை அருகில் அமைக்கப்படும்," என, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் குமார் தெரிவித்தார்.
அதை, 16 மாவட்டங்களாக விரிவுப்படுத்துவது அரசின் இலக்கு. இதனால் உலகத்தரத்தில் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

