அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த தவெக நிர்வாகி!

 
ச்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் உரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமு ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அதற்கு சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ், தனது அருகில் நின்றவுடன் மிகவும் உற்சாகமாக பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளரின் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது.