பெரியார் சிலை அவமதிப்பு - இந்து முன்னனி ஆதரவாளர் 2 பேர் கைது!!

 
periyar

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார் படிப்பகத்தில் திராவிட கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு செருப்பு மாலை அணிவித்து காவி சாயம் பூசப்பட்டது. 

arrested

காவி சாயம்,  பூசி செருப்பு மாலை அணிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் . இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

periyar

அதேசமயம் பெரியார் சிலை தமிழகத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.