இன்ஸ்டா மோகம்.. வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள்! - கோவையில் பரபரப்பு..!
பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பலர் சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் போன்றவை அவர்களின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளன. மாணவர்கள் யூடூப் மற்றும் இன்ஸ்டா பிரபலங்களை அதிகமாக பின் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவிகள் பெண் யூடூப் பிரபலம் ஒருவரை சந்திப்பதற்காக ரயிலில் சென்னை செல்ல முயன்ற சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் சென்னையை சேர்ந்த யூடூப் பிரபலம் மோனலிசா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் பதிவேற்றும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த அந்த, மாணவி இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து அடிக்கடி பேசியும் வந்தார். பின்னர், இதை தனது தோழிகளிடம் கூறியதால், மற்ற மூன்று பேரும் மோனலிசாவை பின் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தனர்.
இதனால், அந்த நான்கு மாணவிகளுக்கும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக அவர்கள் சென்னை செல்ல முடிவு செய்தனர். வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வெட்டை நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் கோவை ரயில் நிலையத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது; மாணவிகள் 4 பேரும் யூடூப் மோனலிசாவை பார்க்க சென்னை செல்வதற்கு அவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் வாருங்கள் என்று கூறியதாக தெரிவித்தனர்.

