எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக சோதனை
Nov 7, 2023, 10:29 IST1699333193441

அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது; அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை, கரூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.