பீர் பாட்டிலில் பூச்சி இறக்கை- மதுப்பிரியர் அதிர்ச்சி
Dec 16, 2025, 17:19 IST1765885763654
மது பிரியர் வாங்கிய பீர் பாட்டிலில் பூச்சிகளின் இறக்கை கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் இன்று மது பிரியர் ஒருவர் பீர் பாட்டில் ஒன்றை வாங்கி இருக்கிறார். அப்போது அந்த பீர் பாட்டிலில் இறந்த பூச்சிகளின் இறக்கை மிதந்ததால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் பீர் பாட்டில் வாங்கிய மதுக்கடையில் திரும்ப கொடுத்தபோது பாட்டிலை கழுவாமல் நிரப்பி இருப்பார்கள். அதனால் தான் இவ்வாறு உள்ளது என அலட்சியமாக பதில் சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இருந்தது.


