ஆவின் பாலில் ஈ - உதவி மேலாளர் சஸ்பெண்ட்!!

 
tn

மதுரை ஆவின் நிறுவனத்தில் தினந்தோறும் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் லிட்டர் பால்,  பாக்கெட்களாகவும் ,  எஞ்சிய பால் ஊப பொருட்களாகவும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் மதுரை அடுத்த வடபழஞ்சியில் உள்ள ஆவின் டெப்போவில் நேற்று பால் வாங்கிய பெண் ஒருவரின் பால் பாக்கெட்டில் ஈ மிதந்துள்ளது. இதை டெப்போ முகவரிடம் அப்பெண்  ஒப்படைத்தார்.

tn

இது குறித்து தகவலறிந்து வந்த ஆவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை ஆய்வு செய்தனர்.  அதில் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்யும் போது ஈ  சென்று இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டதுடன்,  இனி ஈ போன்ற பூச்சிகள் வந்துவிடாமல் தடுக்க உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். 

suspend

இந்நிலையில் மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பால் பேக்கிங்-ன் போது கவனக்குறைவாக செயல்பட்டதற்காக பணியிடை நீக்கம் செய்து மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். பால் பாக்கெட்  பேக்கிங் செய்யும் பணி ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்நிறுவனத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.