திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும்- இனிகோ இருதயராஜ் வழக்கு

 
s

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் விஜய். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்பு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், CM விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும். குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை விஜய் வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. விஜய் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது. விஜய் கட்சி அடையாளங்களை அணிந்து சென்று தேவாலயத்தில் பிரச்சாரம் செய்தார்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.