அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் இளைஞர் பலி

 
dead

தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும்  H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 90க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்  திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சளி மற்றும் இரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த இளைஞர் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் காரணமாக முதல் நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.