முதலமைச்சருடன் நானும் வெளிநாடு பயணம் செல்லவுள்ளேன் - தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

 
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் டி.ஆர்.பி.ராஜா..

முதலீடுகளை ஈர்க்க  சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்,  தானும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக  புதிதாக பொறுப்பேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சரவையில் புதிதாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர்  சென்னை தலைமை செயலகத்தில், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.

tn

அதனைத்தொடர்ந்து செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்த அவர், “முதலமைச்சர் என்ன கட்டளை இடுக்கிறார்களோ?,  அவர்களது என்ன ஓட்டங்களுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியின் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன் தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் பணிபுரிவேன். எனது ஆருயிர் அண்ணன் தற்போதைய நிதித்துறை அமைச்சர் இதற்கு முன்பு இந்த பொறுப்பை வகித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் மகத்தான பணியை தான் தொடர்வேன் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் இதுவரை டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை, டெல்டாவில் பல சிறப்பான திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்.  எந்த சவாலாக இருந்தாலும் நிச்சயமாக திறன் பட செயல்படுவேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான் மிக முக்கியமான நோக்கம். தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சருடன் வெளிநாடு பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்த ராஜா, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் பெரிய முன்னேற்றத்தை  கொண்டு வருகிறது.  அதற்கு முழு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” என்று  தெரிவித்தார்.