#Breaking டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு - சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!!

 
tn

புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

stalin

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,  அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது , ஏற்கனவே இரு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் பால்வளத்துறை அமைச்சர் ஆக இருந்த நாசர் நீக்கப்பட்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 

tn
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு   தகவல் தொழில்நுட்பவியல் துறை தரப்பட்டுள்ளது. 

tn

தகவல் தொழில்நுட்பவியல் துறை  அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு  பால்வளத்துறையும்,  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.