உடலில் வண்ணம் பூசியதுதான் ரோபோ சங்கர் மறைவிற்கு காரணமா?- இந்திரஜா விளக்கம்

 
ச் ச்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் ரோபோ சங்கரின் புகைப்பட திறப்பு விழா நடைபெற்றது. இதில் அவரது மனைவி பிரியங்கா மகள் இந்திரஜா மற்றும் மருமகன் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் சின்னத்திரை நடிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட ரோபோ சங்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர் குடும்பத்தினர், கடினமான சூழ்நிலையிலும் உறுதுணையாக இருந்த செய்தியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துக் கொண்டனர். செய்தியாளர் சந்திப்பு என்பது புதிதல்ல இருந்தாலும் அப்பா இல்லாமல் முதல் முறையாக செய்தியாளர்களை சந்திப்பது மிகவும் கடினமாக உள்ளது என ரோபோ சங்கர் மகள் உருக்கமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எனது தந்தையும் தாயாறும் நடனத்திலிருந்து தான் தங்களது பந்தத்தை ஆரம்பித்தனர் எனவும், அந்த வகையில் எனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் தாயார் நடனமாடி அன்பை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார். அது பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் அதனை விமர்சித்தார்கள் என தெரிவித்துக்கொண்டார். இது தொடர்பாக பேசும் மனநிலையில் தற்போது இல்லை என்பதால் பின்னர் பேசுகிறோம். மேலும் உடலில் வண்ணம் பூசியது மட்டுமே ரோபோ சங்கரின் மனைவிக்கு காரணம் அல்ல என்றும் குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர்.