பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு10,000 ரூபாய் வரை இழப்பீடு - இண்டிகோ
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பணியாற்ற பற்றாக்குறை, விமானிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நாடு முழுவதும் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அதைப்போல் சென்னை விமான நிலையத்திலும் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று பத்தாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 36 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 5000 முதல் 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். டிராவல் பிளாட்பார்ம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் CUSTOMER.EXPERIENCE@GOINDIGO.IN என்ற இ-மெயிலில் தகவல்களை அளிக்கலாம். இ-மெயிலில் தகவல் அளித்த பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். டிசம்பர் 3,4,5 ஆம் தேதிகளில் பெரும் பாதிப்பை சந்தித்த பயணிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்புள்ள இலவச டிராவல் வவுச்சர்கள் டிராவல் வவுச்சர்களை இண்டிகோ விமான பயணத்திற்கு அடுத்த 12 மாதங்களுக்குள் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் தற்போது உள்ள அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீடுடன் சலுகைகளும் வழங்கப்படுமென இண்டிகோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசு விதிகளின் படி பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5000 முதல் 10,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. கடுமையான பாதிப்பு என்ன? என்பது குறித்து இண்டிகோ தெளிவான விளக்கம் எதுவும் குறிப்பிடவில்லை


