விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி: இன்று நள்ளிரவு முதல் இண்டிகோ விமானக் கட்டணங்கள் உயர்வு!
உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு இன்று (அக்டோபர் 06) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி 500 கி.மீ வரை கூடுதல் கட்டணமாக ரூ.375ம், 501 முதல் ஆயிரம் கி.மீ வரை கூடுதல் கட்டணமாக ரூ.600ம், 1501 கி.மீ முதல் 2 ஆயிரம் கி.மீ வரை கூடுதல் கட்டணமாகரூ.1150ம், 2 ஆயிரம் கி.மீ., மேல் கூடுதல் கட்டணமாக ரூ.1300 வசூலிக்கப்படும்.
தெற்காசிய நாடுகளின் பயணங்களுக்கு 500 கி.மீ வரை ரூ.ஆயிரமும், அதற்கு மேல் ரூ.3 ஆயிரமும், தென்கிழக்கு ஆசியா, வளைகுடா, வடக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5,500 ரூபாயும், ஐரோப்பிய நாடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

