15 வயதிலேயே கேப்டனாகி உலக சாதனை படைத்த இந்தியாவின் இளம் புயல்..!

 
1

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சனிக்கிழமை (நவம்பர் 14) இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் பீகார் அணியின் கேப்டனாகக் களமிறங்கினார். இதன் மூலம், தனது 15 வயது மற்றும் 232 நாட்களில் ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயது கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயது கேப்டன் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

சையது முஷ்தாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பீஹார் அணியின் கேப்டனாகக் களமிறங்கியதன் மூலம் அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.குரோஷியா அணியின் ஜாக் வுகுசிக் 17 வயது மற்றும் 311 நாட்களில் கேப்டனாக இருந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. சூர்யவன்ஷி அந்தச் சாதனையை இரண்டு ஆண்டுகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி? 

வைபவ் சூர்யவன்ஷி என்பவர் கிரிக்கெட் பெற்று அபார சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.* தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளார். தனது 13 வயதிலேயே பிரீமியர் லீக் போட்டிக்கான ஒப்பந்தத்தைப் பெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.* 2025 பிரீமியர் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன் அடித்து, டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் ஆனார்