நியூயார்க்கில் துப்பாக்கி சூட்டில் இந்திய இளைஞர் உயிரிழப்பு..!

 
1

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்து வந்த பஞ்சாபை சேர்ந்த குர்தீப் சிங் (28) என்ற இளைஞர், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரிட்ச்மவுண்ட் தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்த மர்ம நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று குர்தீப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதேவேளை, உயிரிழந்த குர்தீப் சிங்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குர்தீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.