மக்களின் மகிழ்ச்சியை களவாடிய இந்திய ரயில்வே.. இதை மட்டும் செய்யாதீங்க - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை..!!
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்றும், சாதாரண வகுப்புப் பெட்டிகளை குறைக்க வேண்டாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூன் 25) ரயில் மூலம் காட்பாடிக்குச் செல்கிறார். இன்று (ஜூன் 25) காலை 10.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாய்நகர் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் (SNSI) மூலம் காட்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார். ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டுடாம் என இந்திய ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது.. AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! (இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல; இது குடும்பம் )The Indian Railway isn’t just a service - it’s family!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
— M.K.Stalin (@mkstalin) June 25, 2025
இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல்… pic.twitter.com/6YIZgXFhnp


