இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..!

 
1

இந்திய பாரா ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் அன்மோல் வசிஷ்டா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அவருக்கு சர்வதேச பாராலிம்பிக் குழு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. டெல்லி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் F55 பிரிவில் அவர் பெற்ற முடிவுகள், புள்ளிகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் இதனால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் விளையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 24, 2026 முதல் ஏப்ரல் 23, 2029 வரை அவர் எந்தவொரு அதிகாரப்பூர்வ போட்டியிலும் அல்லது விளையாட்டு நடவடிக்கையிலும் பங்கேற்க முடியாது. 

புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளக் கிராண்ட் பிரிக்ஸ் (World Para Athletics Grand Prix) போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், தடைசெய்யப்பட்ட  ஸ்டீராய்டு (DHCMT) பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.இந்தத் தடையால், 2026 புதுதில்லி உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F55 பிரிவு) போட்டியில் அவர் பெற்ற முடிவுகள், பதக்கங்கள் மற்றும் புள்ளிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.