#IOB புதுமையான நகைக்கடன் திட்டங்கள் -அசத்தும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

 
Iob bank

இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இரு புதுமையான நகைக்கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அஜய் குமார் ஶ்ரீவஸ்தவா, இப்புதிய திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். வாடிக்கையாளர் நலன் மற்றும் வசதியை மையமாகக் கொண்ட வங்கிச் சேவையை வழங்குவதில் இவ்வங்கி கொண்டிருக்கும் தளராத அர்ப்பணிப்பை இத்திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், கடன் வழங்கல் உட்பட நிதிசார் செயல்தளத்தை புரட்சிகரமாக மாற்ற வேண்டும் என்ற இவ்வங்கியின் இலட்சிய செயல்பாட்டையும் இத்திட்டங்கள் வலுப்படுத்துகின்றன.

 

Iob

IOB கோல்டு பவர்டு கார்டு: பயனாளிகளின் வசதியை மறுவரையறை செய்யும் IOB கோல்டு பவர்டு கார்டு, அவர்களது நகைக்கடன் ஓவர்டிராஃப்ட் கணக்குகளோடு நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கார்டுக்கு உடனடி அணுகுவசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு முன்னோடித்துவமான தீர்வாகும். இதுவரை இருந்த பாரம்பரியமான அணுகுமுறைகளை புரட்சிகரமாக மாற்றும் இந்த புதுமையான கார்டு, நெகிழ்வுத்திறனையும் வழங்குகிறது. கார்டில் பயன்படுத்தப்பட்ட தொகை மீது மட்டுமே வட்டி வசூலிக்கப்படும் வசதி இதில் இருக்கிறது. கடன் முதிர்வுத் தேதியின்போது (அதாவது, ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்கள்) வட்டி மற்றும் கடன் தொகை ஆகிய இரண்டையும் செலுத்துவதற்கு நெகிழ்வுத்திறனை இந்த கார்டு வழங்குகிறது.
ரூ. 25,000 முதல் ரூ. 25 இலட்சம் வரை கடன் தொகையை வழங்கும் IOB கோல்டு பவர்டு கார்டு, ஏடிஎம்களில் ரொக்கப் பணத்தை எடுப்பதற்கான வசதியையும் பயனாளிகளுக்கு வழங்குகிறது. POS மற்றும் E com பரிவர்த்தனைகளுக்கும் இந்த கார்டை பயன்படுத்தலாம். தினசரி உச்சவரம்பாக ரூ. 1 இலட்சம் என்பதுடன் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 20,000 என்ற ரொக்க வரம்புக்கு உட்பட்டு ஏடிஎம்களிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மின்-வர்த்தக மற்றும் POS பரிவர்த்தனைகளுக்கும் ஒரு நாளுக்கு மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு ரூ. 25.00 இலட்சமாகும்.
வருடாந்திர மறு ஆய்வுக்கு உட்பட்டு இந்த கார்டின் செல்லத்தக்க காலம் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த புதுமையான தீர்வு, அதிகளவிலான நிதிசார் கட்டுப்பாடு மற்றும் சௌகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மிகச்சிறப்பான வங்கிச் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவங்களை உறுதிசெய்வதில் IOB கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதாக இத்திட்டம் அமைந்திருக்கிறது.
நகைக்கடன் சுவிதா: வீட்டுக்கடன் பெறுபவர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்திசெய்வதற்கனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வே நகைக்கடன் சுவிதா. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டுமன்றி பிற வங்கிகளிடமிருந்து வீட்டுக்கடன் பெறுபவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ஜின் மணி என அழைக்கப்படும் விடுமிகு தொகை, பத்திர பதிவு கட்டணங்கள் மற்றும் எதிர்பாராத செயல்திட்ட செலவினங்கள் அதிகரிப்பு போன்றவை வீட்டுக்கடன் வாங்கும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய சிக்கலான நிதிசார் செலவினங்களாக எதார்த்தத்தில் இருக்கின்றன. இந்த நகைக்கடன் தீர்வு, அத்தகைய செலவுகள் ஏற்படும் தேதியிலிருந்து 12 மாதங்கள் காலஅளவிற்குள் செலவை ஈடுசெய்யும் வசதியினை வழங்குகிறது.
ரூ. 25,000 லிருந்து ரூ. 50 இலட்சம் வரையிலான கடன் தொகை பெறும் வசதி மற்றும் மிதமான வட்டி விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்ட நகைக்கடன் சுவிதா விரிவான நிதிசார் ஆதரவு மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்கிறது. புல்லட் பேமெண்ட் மற்றும் சமமாதத் தவணைகள் வழிமுறை உட்பட நெகிழ்வுத்திறனுள்ள திரும்பச் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் இதில் இருக்கின்றன. தங்களது நிதி செலவினங்களை திறம்பட நிர்வகிப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு இது ஆதரவளிக்கிறது; அதே நேரத்தில் 1960 வருமான வரி சட்டத்தின்கீழ் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு வருமான வரி சலுகைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
வசதி, நெகிழ்வுத்திறன் மற்றும் வாடிக்கையாளருக்கு அதிக திருப்தி ஆகியவற்றில் புதிய தரநிலைகளை நிறுவுகின்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதுமையான நகைக்கடன் திட்டங்களைக் கொண்டு வங்கிச் சேவையின் சிறப்பான பலன்களை அனுபவித்து மகிழுங்கள்., என்று தெரிவித்துள்ளனர்.