இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury... டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்

 
இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury...  டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் காயம் காரணமாக விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

24 வயதான இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் இலங்கை சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. கொழும்பில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. BCCI வட்டாரங்களின்படி, சாய் சுதர்சன் போட்டிக்கு திரும்புவதற்கு முன்பு காயம் முழுமையாக குணமடைய மேலும் சில காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டாலும், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை.

சாய் சுதர்சன் விலகிய நிலையில், இந்திய அணியின் காயம் தொடர்பான பட்டியல் நீள்கிறது. ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் அவர் விளையாட முடியாது. மேலும், கேப்டன் சுப்மன் கில், பயிற்சியின்போது வலது கை மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. தற்போது சாய் சுதர்சனும் இல்லாத நிலையில், 3-வது இடத்தில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல், 142 ரன்கள் எடுத்துள்ளார்.