டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி!

 
1

20 அணிகள் பங்கேற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற பல அற்புதமான ஆட்டங்களை கடந்து இன்று இறுதிப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது .

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது முழு திறனையும் காட்டி வருகிறது .

அதன்படி இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் .

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் கேப்டன் ரோஹித் மற்றும் கோலி களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 9 ரன்களில் வெளியேற அடுத்த வந்த பண்டும் வந்த வேகத்தில் நடையை காட்டினார்.

பின்னர் வந்த அக்சர் பட்டேலுடன் கைகோர்த்த விராட் கோலி தனது நிதனான ஆட்டத்தை தொடர்ந்து வந்தார் . ஒருபக்கம் அக்சர் அதிரடி காட்ட மறுபக்கம் கோலி பொறுப்புடன் ஆடி வர அணிக்கு தேவையான ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.

இதில் அரைசதம் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் 47 ரன்களில் வெளியேற மறுபக்கம் ஆடிய அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 76 ரன்கள் எடுத்த நிலையில் கோலி வெளியேற பின்னர் துபே , ஜடேஜா தங்களை முடிந்ததை செய்து வெளியேறினர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது . இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

19 ஓவரில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனை ஹர்திக் பாண்ட்யா வீச முதல் பந்தில் டேவிட் மில்லர் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2 ஆவது பந்து பவுண்டரிக்கு செல்ல, 3 ஆவது மற்றும் 4 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 5 ஆவது பந்தில் ரபாடா 4 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.