"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாள் இன்று..!
கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணியரின் வருகை குறைந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. பதிவில், ''மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் கிடையாது என்று இந்திய ராணுவம் தெளிவுப்படுத்தி உள்ளது.

