4000 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா...
Dec 23, 2025, 13:51 IST1766478095600
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அடிப்படையில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியுதவி புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைப்பு செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.


