சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம்

 
india south africa women match

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பெங்களூருவில் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா முதல் இரண்டு போட்டிகளில் சதமும் மூன்றாவது போட்டியில் 90 எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் அடுத்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை சென்னையில் விளையாட உள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Image

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டின் பார்வையாளர்களை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.