கனடா அமெரிக்காவுக்கு தபால் சேவை நிறுத்தம் - இந்திய தபால் துறை..!
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு எதிர்ப்பாக இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
முன்பு 800 டாலர் வரை மதிப்புள்ள அஞ்சல் பொருட்களுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், 100 டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு தொடர்கிறது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

