துவங்கியது தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!!
May 16, 2026, 16:08 IST1778927880624
தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கும் என வானிலை மையம் கணித்து இருந்தது. அந்த வகையில் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் இன்று (மே 16) தென்மேற்கு பருவமழை துவங்கியது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வழக்கமாக ஜூன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
கேரளாவில் இயல்பை விட 6 நாட்கள் முன் கூட்டியே மே 26ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

